AKASA TREE
AKASA- ஆகாஸா அனைவருக்கும் அன்பான வணக்கம்! ஆசிரியர் குரல் என்ற முக நூல் கடந்த 2012 முதல் கல்வி சமூகம் சேவை இலக்கியம் ஆன்மிக செய்திகளை தினமும் பகிர்ந்து வருகிறோம். நல்லவற்றை இந்த சமூகத்தில் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆசிரியர் குரல் அறப்பணி சமூகப்பணி அறக்கட்டளை Asiriyar Kural Arappani Samugappani Arakkatralai (AKASA) நிறுவப்பட்டு தொடர்ந்து பணி செய்து வருகிறது. Akasa சார்பில் சிதம்பரத்தில் அக்டோபர் 2022 இல் சமூகத்தில் பல நிலைகளில் பணி சேவை செய்தவர்களுக்கு ஆகாஸா விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் ஆகாஸா சார்பில் நடராஜா இணைய வானொலி இரண்டு ஆண்டுகளாக ஒலிபரப்பி சேவை செய்து வருகிறது. இதனை பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக விரைவில் செய்ய உள்ளோம். ஆகாஸா சார்பில் Akasa magazine ஆகாஸா இணைய இதழ் இன்று 11-5-2023 குரு வாரம் முதல் துவங்கி வெளி வர உள்ளது. ஆசிரியர் குழு: ஶ்ரீ நடராஜ தீஷிதர், ஶ்ரீ பாலா ஶ்ரீ ராம், ஆசிரியர் குரல் அருணாசலம், கா.பா.ஞான சேகரன், லதா அருணாசலம், சரோஜா கற்பகம், தேன்மொழி ராஜேந்திரன், Akasa 27/174 West car street CHIDAMBARAM 608 001 Cell:9360429306/8667488837




